|
பாடல் எண் :1955 | நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவின் றேத்துமே நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே. |
| 2 | பொ-ரை: ஞானமும், கல்வியும், நானறிந்த வித்தையும் பஞ்சாட்சரமே; நா கூறி வழிபடுவதும் அதனையே; நன்னெறி காட்டுவதும் அத்திருமந்திரமேயாகும். கு-ரை: ஞானமும் - பரஞானம். கல்வி - அபரஞானம். ஞானமும் கல்வியும் - கல்வியால் விளையும் அறிவும் கல்வியும். நானறிவிச்சை - நான் அறிந்தனவாய மந்திரம் அல்லது கலையுணர்வு. நன்னெறி - ஞானம், வீடுபேறடையும் வழி. |
|