|  |  | பாடல் எண் :1973 |  | | கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப் பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல்
 கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக்
 கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே.
 | 
 |  | 1 |  | பொ-ரை: காலதூதர்களே! கண்டுகொள்ள அரியவன். உள்ளத்தைக் கனியச்செய்து முன்பு நான் செய்த அடிமைத் திறத்தைக் கேட்பீரேயானால் தொண்டரைச் சூழாதீர்கள்.
 கு-ரை: கண்டுகொள்ளரியான் - காணுதற்கு அரியவன். கனிவித்து - என்னிடம் கனியும்படியாக அன்பு பாராட்டி. பாழிமை - அடிமைத்திறத்தின் உறைப்பு. கேட்டிரேல் - கேட்டீரானால். கொண்டபாணி - பாடுதலை மேற்கொண்ட இசைப்பாடல். கொடுகொட்டி - தோற்கருவி, வாத்திய விசேடம். பாணிகொண்ட கொடுகொட்டி என மாற்றி இறைவன் புகழை இசைபாடுவார்க்குப் பக்கவாத்தியமாகக் கொண்ட கொடுகொட்டிதாளம் என்பனவற்றைக் கைக்கொண்ட அடியார்களை என்க. சூழல்  - சூழாதேயுங்கள்.
 | 
 |