|  |  | பாடல் எண் :1984 |  | | காச னைக்கன லைக்கதிர் மாமணித் தேச னைப்புக ழார்சிலர் தெண்ணர்கள்
 மாசி னைக்கழித் தாட்கொள வல்லவெம்
 ஈச னையினி யான்மறக் கிற்பனே.
 | 
 |  | 1 |  | பொ-ரை: காசு உடையவனும், கனல் உடையவனும், ஒளிச்சுடர்விடும் செம்மணி விளக்கம் உடையவனுமாகிய பெருமானைச் சில தெளிவற்ற மூடர்கள் புகழார். குற்றத்தினைக் கழித்து ஆட்கொள்ளவல்ல எம் இறைவனை இனி நான் மறக்கும் வல்லமை உடையேனோ?. கு-ரை: காசனை - விடக்கறையாகிய மாசினை உடையவனை; பொற்காசு போல்பவன் எனினுமாம். தேசு - ஒளி. தெண்ணர் - கீழோர். தெளிந்த அறிவில்லாதவர்கள். மாசினைக் கழித்து - குற்றம் நீக்கி. மறக்கிற்பனே - மறப்பேனோ.
 | 
 |