|  |  | பாடல் எண் :1987 |  | | ஈச னென்னை யறிந்த தறிந்தனன் ஈசன் சேவடி யேற்றப் பெறுதலால்
 ஈசன் சேவடி யேத்தப்பெற் றேனினி
 ஈசன் தன்னையும் யான்மறக் கிற்பனே.
 | 
 |  | 4 |  | பொ-ரை: இறைவன் சேவடிகளை ஏத்தப் பெறும் இயல்பினன் ஆதலால் என்னை இறைவன் அறிந்ததை யான் அறிந்தேன்; பிறகும் அவன் சேவடியை ஏத்தப்பெற்றேன்; ஆதலின் இனி ஈசனை யான் மறக்கும் வல்லமை உடையேனோ? கு-ரை: என்னை அறிந்தது - என்னைத்தெரிந்து திருவருள் பாலித்ததை. அறிந்தனன் - நானும் அறிந்தேன். சேவடி - திருவடிகளை. ஏற்றப்பெறுதலால் - என் உள்ளத்தில் ஏற்றிக் கொண்டிருத்தலால். ஏத்தப்பெற்றேன் - துதிக்கப்பெற்றேன்.
 | 
 |