|
| பாடல் எண் :2008 | நெய்யும் பாலுங்கொண் டாட்டி நினைந்திலர் பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர் ஐயன் வெய்ய அழல்நிற வண்ணனை மெய்யைக் காணலுற் றாரங் கிருவரே. |
| | 4 | பொ-ரை: திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் நெய்யும் பாலும் கொண்டு அபிடேகித்து நினைந்திலராய்ப் பொய்யும்பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலராய் ஐயனாகிய வெப்பமுடைய அழலின் நிறம் கொண்ட இயல்புடைய பெருமானது மெய்ம்மையைக் காணலுற்றுக் காண்கிலராயினார். கு-ரை: ஆட்டி - அபிடேகம் செய்து. நினைந்திலர் - நினையாராயினர். பொக்கம் - வஞ்சக வார்த்தை. போக்கி - நீக்கி. ஐயன் - தலைவன். வெய்ய - வெம்மையை உடையதான. அழல்நிற வண்ணன் - நெருப்புப்போலும் சிவந்த ஒளிவடிவாய்த் தோன்றியவன். மெய்யை - உண்மையின் வடிவானவனை. |
|