|  |  | பாடல் எண் :2012 |  | | வெந்த நீறு விளங்க அணிந்திலர் கந்த மாமல ரிண்டை புனைந்திலர்
 எந்தை யேறுகந் தேறெரி வண்ணனை
 அந்தங் காணலுற் றாரங் கிருவரே.
 | 
 |  | 8 |  | பொ-ரை: திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் வெந்த திருநீறு விளங்க அணியாதவராய், மணமிக்க மலர்களால் இண்டைமாலை புனையாதவராய் எந்தையாகிய ஏறுகந்து ஏறும் எரிவண்ணனாகிய பெருமானின் ஆதியும் அந்தமும் காண இயலாதவர் ஆயினார். கு-ரை: வெந்தநீறு - திருநீறு. கந்தமாமலர் - மணம் பொருந்திய சிறந்த மலர். இண்டை - தலைமாலை. எந்தை - எனக்குத் தந்தையாவான். ஏறு உகந்து ஏறு - இடபத்தை விரும்பி ஊர்ந்து செல்லும். அந்தம் - அடி முடிகளின் முடிவிடங்கள்.
 | 
 |