|  |  | பாடல் எண் :2014 |  | | கண்டி பூண்டு கபாலங்கைக் கொண்டிலர் விண்ட வான்சங்கம் விம்மவாய் வைத்திலர்
 அண்ட மூர்த்தி யழல்நிற வண்ணனைக்
 கெண்டிக் காணலுற் றாரங் கிருவரே.
 | 
 |  | 10 |  | பொ-ரை: திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் கணடி அணிந்து கபாலம் கையிற்கொள்ளாதவராய் வெண்மை விரிந்த சங்கம் விம்முமாறு வாயில் வைத்தூதாதவராய் அண்டமூர்த்தியாகிய தீ நிறவண்ணனை மண்ணில் கிண்டியும் விண்ணில் பறந்தும் காண முயன்று காண்கிலர் ஆயினார். கு-ரை: கண்டி - உருத்திராக்கமாலை. பூண்டு - அணிந்து. விண்ட - வாய் விரிந்த. வான் சங்கம் - வெள்ளிய சங்கு. விம்ம - ஒலிக்க. வாய் வைத்திலர் - வாயின்கண் வைத்து ஊதினாரில்லை. அண்டமூர்த்தி - எல்லா உலகங்களின் வடிவானவன். கெண்டி - கிண்டி.
 | 
 |