| 
			 |  பாடல் எண் :2018 |   பணியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை 	 முனியாய் நீயுல கம்முழு தாளினும் 	 தனியாய் நீசரண் நீசல மேபெரி 	 தினியாய் நீயெனக் கெந்தை பிரானிரே. |  
  |  | 3 |  பொ-ரை: எந்தை பெருமானே! தண்ணியாய்! விரும்புதறைகுரிய தெண்ணிலவு பாயும் படர்புன்சடை முனிவனே! நீ உலகம் முழுதும் ஆண்டாலும் தனியாய்! சரண் நீயே; எனைபால் வஞ்சனையே பெரிது; எனக்கு இனியாய் நீயே. 	கு-ரை: பனியாய் - பனிபோன்று குளிர்ந்த தன்மையனாய். வெங் கதிர்பாய் - வெம்மையை உடைய சூரிய கிரணங்கள் பொருந்திய. படர் - விரிந்த. புன்சடை - மெல்லிய சடை. முனியாய் - முனிவனாய். தனியாய் நீ - ஏகனாயிருப்பவன் நீ. சலமே - துன்பம். |  
  |