|  |  | பாடல் எண் :2033 |  | | எந்தை யேயெம் பிரானே யெனவுள்கிச் சிந்திப் பாரவர் தீவினை தீருமால்
 வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
 அந்த மாவளப் பாரடைந் தார்களே.
 | 
 |  | 8 |  | பொ-ரை:  எந்தையே எம்பெருமானே என உள்ளத்தால் நினைந்து சிந்திப்பார்களின் தீவினை தீரும் வெந்த திருநீறு பூசிய மெய்யை உடைய வேதியனை அடைந்தவர்கள் அந்தமாக அளக்குந் தம்மை உடையார். கு-ரை:  உள்கி - நினைத்து தீரும் - நீங்கும் ஆல் - அசை அந்தமன அளப்பார் - அளப்பார் என்பதனை முன்னே கூட்டி நூல்களின் பொருளியல்பை ஆராய்பவர்கள் என்க.
 | 
 |