|  |  | பாடல் எண் :2034 |  | | ஏன வெண்மருப் போடென்பு பூண்டெழில் ஆனை யீருரி போர்த்தன லாடிலும்
 தான வண்ணத்த னாகிலுந் தன்னையே
 வான நாடர் வணங்குவர் வைகலே.
 | 
 |  | 9 |  | பொ-ரை:  பன்றியின் வெள்ளிய கொம்பினோடு எலும்பு அணிந்த அழகுமிக்க ஆனையினை ஈர்ந்து தோல் போத்துத் தீயுடன்ஆடினாலும், தான் அவ்வியல்புடையனாயினும் தேவர்கள் நாள் தோறும் தன்னையே வணங்குவர். கு-ரை:  ஏனமருப்பு - பன்றிக்கொம்பு எழில்-அழக ஆனை ஈருரி - ஆனையினை உரித்த தோல் அனலாடினும் - தீயாடினாலும், தான் அவ்வண்ணத்தன் - தானும் அனலாடியதற்கேற்ப அனலின் நிறத்தையே உடையவன். வைகல் - நாடோறும் தானவண்ணம் பிச்சையேற்கும் கோலம் எனினுமாம்.
 | 
 |