|  |  | பாடல் எண் :2037 |  | | ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும் நாத னேயரு ளாயென்று நாடொறும்
 காதல் செய்து கருதப் படுமவர்
 பாத மேத்தப் பறையும் நம் பாவமே.
 | 
 |  | 12 |  | பொ-ரை: கடல்வண்ணம் உடையவனாகிய திருமாலும்  ஒள்ளிய தாமரைமலர்  மேலானாகிய பிரமனும், " தலைவனே அருள்வாய்" என்று நாள்தோறும் விருப்பம் புரிந்து எண்ணப் படுவாராகிய இறைவன் பாதங்களை ஏத்த நம்பாவங்கள் கெடும். கு-ரை: ஓத வண்ணன் - கடல்நீரை ஒத்த கரிய திருமால் ஒண்மலர்ச் செல்வன் - பிரமன் கருதப்படுபமல் - மனத்தால் எண்ணித் துதிக்கப்படுவர் தியானிக்கப்படுபவருடைய தியேயப்பொருளாயுள்ளவன் " சிவஏகோத்தியேய " என்பது வேதம்.
 | 
 |