|  |  | பாடல் எண் :2072 |  | | கூட வேடத்த ராகிக் குழுவிலென் வாடி யூனை வருத்தித் திரியிலென்
 ஆடல் வேடத்த னம்பலக் கூத்தனைப்
 பாட லாளர்க்கல் லாற்பய னில்லையே.
 | 
 |  | 7 |  | பொ-ரை: வேடங்கள் கூடியவராகித் திரண்டாலும், உடலை வாடிவருத்தித் திரிந்தாலும் என்ன பயன்? ஆடல்வேடத்தைஉடையவனாகிய அம்பலக்கூத்தனைப் பாடுபவர்க்கு அல்லால் மற்றையோர்க்குப் பயன் இல்லை. கு-ரை: கூட வேடம் - தாழ்வை மறக்கக்கூடிய வேடம். குழுமிலென் - கூடினால் என்ன பயன் விளையும். வாடி - மெய்வருந்தி. ஊன் - மாமிசம். வருத்தி - இறக்கும்படி வருத்தி உண்டு. ஆடல் வேடத்தன் - ஆடுகின்ற தோற்றமுடையவன். பாடலாளர்க்கு அல்லால்- பாடுபவர்களுக்கேயல்லாமல்.
 | 
 |