|  |  | பாடல் எண் :2074 |  | | கோடி தீர்த்தங் கலந்து குளித்தவை ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
 ஓடு நீரினை யோட்டைக் குடத்தட்டி
 மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே.
 | 
 |  | 9 |  | பொ-ரை: கோடிதீர்த்தங்கள் தோறும் கலந்து குளித்து அவற்றில் நீராடிக் கிடந்தாலும் அரனிடத்து அன்பு இல்லையாயின். ஓடும் இயல்பினை உடைய நீரை ஓட்டைக்குடத்திலே நிறைத்து மூடிவைத்திட்ட மூர்க்கன் ஓருவனின் செயலோடே அது ஓக்கும். கு-ரை: கோடி - பலவாய எண்ணிற்கு ஓர் வரையறை. பல என்பது பொருள். ஓடும் நீரினை- ஓடும் தண்ணீரை. அட்டி - அள்ளிமுகந்து. மூர்க்கன் - அறிவில்லாதவன்.
 | 
 |