|  |  | பாடல் எண் :2080 |  | | கூவ லாமை குரைகட லாமையைக் கூவ லோடொக்கு மோகட லென்றல்போல்
 பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்
 தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.
 | 
 |  | 5 |  | பொ-ரை: கிணற்றாமை கடலாமையை நோக்கி இக்கிணற்றோடொக்குமோ கடல்? என்று கூறுதலைப்போன்று தேவதேவனாகிய சிவபெருமானின் பெருந்தன்மையைப் பாவிகளாகிய மக்கள் பார்த்தற்கு அரிது என்பர். கு-ரை: கூவல் - கிணறு. குரை - ஒலிக்கின்ற. பாவகாரிகள் - பாவச்செயல் செய்பவர்கள். பார்ப்பரிது - இறைவனது தன்மையைக் காணுதல் முடியாது.
 | 
 |