5.6 திருஆரூர்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1122

எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
முப்போதும் பிரமன் தொழ நின்றவன்,
செப்பு ஓதும் பொனின் மேனிச் சிவன் அவன்,
அப் போதைக்கு, ழுஅஞ்சல்!ழு என்னும்-ஆரூரனே.

1
உரை
பாடல் எண் :1123

சடையின் மேலும் ஓர் தையலை வைத்தவர்,
அடைகிலா அரவை அரை ஆர்த்தவர்,
படையின் நேர் தடங்கண் உமை பாகமா
அடைவர்போல், இடுகாடர்-ஆரூரரே.

2
உரை
பாடல் எண் :1124

விண்ட வெண்தலையே கலன் ஆகவே
கொண்டு அகம் பலி தேரும் குழகனார்;
துண்டவெண்பிறை வைத்த இறையவர்
அண்டவாணர்க்கு அருளும் ஆரூரரே.

3
உரை
பாடல் எண் :1125

விடையும் ஏறுவர்; வெண் தலையில் பலி
கடைகள் தோறும் திரியும் எம் கண்ணுதல்;
உடையும் சீரை; உறைவது காட்டுஇடை;
அடைவர்போல், அரங்குஆக; ஆரூரரே.

4
உரை
பாடல் எண் :1126

துளைக்கைவேழத்து உரி உடல் போர்த்தவர்;
வளைக்கையாளை ஓர்பாகம் மகிழ்வு எய்தி
திளைக்கும் திங்கள் சடையின்திசைமுழுது
அளக்கும் சிந்தையர் போலும்-ஆரூரரே.

5
உரை
பாடல் எண் :1127

பண்ணின் இன்மொழியாளை ஓர்பாகமா,
விண்ணின் ஆர் விளங்கும் மதி சூடியே,
சுண்ண-நீறு மெய்ப் பூசி, சுடலையின்
அண்ணி ஆடுவர்போலும்-ஆரூரரே.

6
உரை
பாடல் எண் :1128

மட்டு வார் குழலாளொடு மால்விடை
இட்டமா உகந்து ஏறும் இறைவனார்-
கட்டுவாங்கம், கனல், மழு, மான் தனோடு,
அட்டம் ஆம் புயம் ஆகும் ஆரூரரே.

7
உரை
பாடல் எண் :1129

தேய்ந்த திங்கள் கமழ் சடையன்; கனல்
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்;
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
ஆய்ந்த நால்மறை ஓதும் ஆரூரரே.

8
உரை
பாடல் எண் :1130

உண்டு நஞ்சு கண்டத்துள் அடக்கி, அங்கு
இண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்;
கொண்ட கோவண ஆடையன்கூர் எரி
அண்டவாணர் அடையும் ஆரூரரே.

9
உரை
பாடல் எண் :1131

மாலும் நான்முகனும்(ம்) அறிகிற்கிலார்;
காலன் ஆய அவனைக் கடந்திட்டுச்
சூலம் மான்மறி ஏந்திய கையினார்
ஆலம் உண்டு அழகு ஆய ஆரூரரே.

10
உரை
5.7 திருஆரூர்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1132

கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
பக்கமே பகுவாயன பூதங்கள்
ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய்,
அக்கினோடு அரவு ஆர்ப்பர் - ஆரூரரே.

1
உரை
பாடல் எண் :1133

எந்த மா தவம் செய்தனை, நெஞ்சமே!-
பந்தம் வீடு அவை ஆய பராபரன்
அந்தம் இல் புகழ் ஆரூர் அரநெறி
சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்கவே?

2
உரை
பாடல் எண் :1134

வண்டு உலாம் மலர்கொண்டு வளர்சடைக்கு
இண்டைமாலை புனைந்தும், இராப்பகல்
தொண்டர் ஆகி, தொடர்ந்து விடாதவர்க்கு
அண்டம் ஆளவும் வைப்பர்-ஆரூரரே.

3
உரை
பாடல் எண் :1135

துன்பு எலாம் அற நீங்கிச் சுபத்தராய்,
என்பு எலாம் நெக்கு, இராப்பகல் ஏத்தி நின்று,
இன்பராய் நினைந்து, என்றும் இடை அறா
அன்பர் ஆமவர்க்கு அன்பர்-ஆரூரரே.

4
உரை
பாடல் எண் :1136

முருட்டு மெத்தையில் முன் கிடத்தாமுனம்,
அரட்டர் ஐவரை ஆசு அறுத்திட்டு, நீர்,
முரண்-தடித்த அத் தக்கன் தன் வேள்வியை
அரட்டு அடக்கிதன் ஆரூர் அடைமினே!

5
உரை
பாடல் எண் :1137

எம் ஐயார் இலை; யானும் உளேன் அலேன்;
எம்மை யாரும் இது செய வல்லரே?
ழுஅம்மை யார், எனக்கு?ழு என்று என்று அரற்றினேற்கு
அம்மை ஆரத் தந்தார், ஆரூர் ஐயரே.

6
உரை
பாடல் எண் :1138

தண்ட ஆளியை, தக்கன் தன் வேள்வியை,-
செண்டு அது ஆடிய தேவரகண்டனை,
கண்டு கண்டு இவள் காதலித்து அன்பு அது ஆய்க்
கொண்டி ஆயின ஆறு, என் தன் கோதையே!

7
உரை
பாடல் எண் :1139

இவள் நமைப் பல பேசத் தொடங்கினாள்;
அவணம் அன்று எனில், ழுஆரூர் அரன்ழு எனும்;
பவனி வீதி விடங்கனைக் கண்டு இவள்,
தவனி ஆயின ஆறு, என் தன் தையலே!

8
உரை
பாடல் எண் :1140

நீரைச் செஞ்சடை வைத்த நிமலனார்,
கார் ஒத்த(ம்) மிடற்றர், கனல் வாய் அரா-
ஆரத்தர், உறையும்(ம்) அணி ஆரூரைத்
தூரத்தே தொழுவார் வினை தூளியே.

9
உரை
பாடல் எண் :1141

உள்ளமே! ஒன்று உறுதி உரைப்பன், நான்:
வெள்ளம் தாங்கும் விரிசடை வேதியன்,
அள்ளல் நீர் வயல் ஆரூர் அமர்ந்த எம்
வள்ளல், சேவடி வாழ்த்தி வணங்கிடே!

10
உரை
பாடல் எண் :1142

விண்ட மா மலர்மேல் உறைவானொடும்
கொண்டல் வண்ணனும் கூடி அறிகிலா
அண்டவாணன்தன் ஆரூர் அடி தொழப்
பண்டை வல்வினை நில்லா, பறையுமே.

11
உரை
பாடல் எண் :1143

மை உலாவிய கண்டத்தன், அண்டத்தன்,
கை உலாவிய சூலத்தன், கண்ணுதல்,
ஐயன், ஆரூர் அடி தொழுவார்க்கு எலாம்
உய்யல் ஆம்; அல்லல் ஒன்று இலை; காண்மினே!

12
உரை