5.70 திருக்கொண்டீச்சுரம்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1770

கண்ட பேச்சினில் காளையர் தங்கள் பால்
மண்டி ஏச்சுணும் மாதரைச் சேராதே,
சண்டியீச்சுரவர்க்கு அருள்செய்த அக்
கொண்டியீச்சுரவன் கழல் கூறுமே!

1
உரை
பாடல் எண் :1771

சுற்றமும், துணை நல் மடவாளொடு,
பெற்ற மக்களும், பேணல் ஒழிந்தனர்;
குற்றம் இல் புகழ்க் கொண்டீச்சுரவனார்
பற்று அலால், ஒரு பற்று மற்று இல்லையே.

2
உரை
பாடல் எண் :1772

மாடு தான் அது இல் எனின், மானுடர்
பாடுதான் செல்வார் இல்லை; பல்மாலையால்
கூட நீர் சென்று, கொண்டீச்சுரவனைப்
பாடுமின்! பரலோகத்து இருத்துமே.

3
உரை
பாடல் எண் :1773

தந்தை, தாயொடு, தாரம், எனும் தளை-
பந்தம் ஆங்கு அறுத்து, பயில்வு எய்திய
கொந்து அவிழ் பொழில் கொண்டீச்சுரவனைச்
சிந்தை செய்ம்மின்கள், சேவடி சேரவே!

4
உரை
பாடல் எண் :1774

கேளுமின்(ன்): இளமை அது கேடு வந்து
ஈளையோடு இருமல்(ல்) அது எய்தல் முன்,
கோள் அரா அணி கொண்டீச்சுரவனை
நாளும் ஏத்தித் தொழுமின்! நன்கு ஆகுமே.

5
உரை
பாடல் எண் :1775

வெம்பு நோயும் இடரும் வெறுமையும்
துன்பமும் துயரும்(ம்) எனும் சூழ்வினை,
கொம்பனார் பயில் கொண்டீச்சுரவனை,
ழுஎம்பிரான்!ழு என வல்லவர்க்கு இல்லையே.

6
உரை
பாடல் எண் :1776

அல்லலோடு அருநோயில் அழுந்தி, நீர்,
செல்லுமா நினையாதே, கனை குரல்
கொல்லை ஏறு உடைக் கொண்டீச்சுரவனை
வல்ல ஆறு தொழ, வினை மாயுமே.

7
உரை
பாடல் எண் :1777

நாறு சாந்து அணி நல்முலை, மென்மொழி,
மாறு இலா மலைமங்கை ஓர்பாகமாக்
கூறனார் உறை கொண்டீச்சுரம் நினைந்து
ஊறுவார் தமக்கு ஊனம் ஒன்று இல்லையே.

8
உரை
பாடல் எண் :1778

அயில் ஆர் அம்பு எரி, மேரு வில், ஆகவே
எயிலாரும் பொடி ஆய் விழ எய்தவன்,
குயில் ஆரும் பொழில் கொண்டீச்சுரவனைப்
பயில்வாரும் பெருமை பெறும் பாலரே.

9
உரை
பாடல் எண் :1779

நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான் தனை
மலையினால் அடர்த்து(வ்) விறல் வாட்டினான்,
குலையின் ஆர் பொழில் கொண்டீச்சுரவனைத்
தலையினால் வணங்க, தவம் ஆகுமே.

10
உரை