5.76 திருக்கானூர்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1830

திருவின் நாதனும், செம்மலர் மேல் உறை
உருவனாய், உலகத்தின் உயிர்க்கு எலாம்
கருவன் ஆகி, முளைத்தவன் கானூரில்
பரமன் ஆய பரஞ்சுடர்; காண்மினே!

1
உரை
பாடல் எண் :1831

ழுபெண்டிர், மக்கள், பெருந் துணை, நன்நிதி,
உண்டு இறேழு என்று உகவன்மின், ஏழைகாள்!
கண்டு கொண்மின், நீர், கானூர் முளையினை,
புண்டரீகப் பொதும்பில் ஒதுங்கியே!

2
உரை
பாடல் எண் :1832

தாயத்தார், தமர், நன்நிதி, என்னும் இம்
மாயத்தே கிடந்திட்டு மயங்கிடேல்!
காயத்தே உளன், கானூர் முளையினை
வாய்அ(த்)தால் வணங்கீர், வினை மாயவே!

3
உரை
பாடல் எண் :1833

குறியில் நின்று, உண்டு கூறை இலாச் சமண்
நெறியை விட்டு, நிறைகழல் பற்றினேன்:
அறியல் உற்றிரேல், கானூர் முளை அவன்
செறிவு செய்திட்டு இருப்பது என் சிந்தையே.

4
உரை
பாடல் எண் :1834

பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை
மெய்த்தன் என்று வியந்திடல், ஏழைகாள்!
சித்தர், பத்தர்கள், சேர் திருக்கானூரில்
அத்தன் பாதம் அடைதல் கருமமே.

5
உரை
பாடல் எண் :1835

கல்வி ஞானக்கலைப் பொருள் ஆயவன்,
செல்வம் மல்கு திருக்கானூர் ஈசனை,
எல்லியும் பகலும்(ம்) இசைவு ஆனவா
சொல்லிடீர், நும் துயரங்கள் தீரவே!

6
உரை
பாடல் எண் :1836

நீரும், பாரும், நெருப்பும், அருக்கனும்,
காரும், மாருதம்-கானூர் முளைத்தவன்;
சேர்வும் ஒன்று அறியாது, திசைதிசை
ஓர்வும் ஒன்று இலர், ஓடித் திரிவரே.

7
உரை
பாடல் எண் :1837

ஓமத்தோடு அயன்மால் அறியா வணம்
வீமப் பேர் ஒளி ஆய விழுப்பொருள்,
காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்;
சேமத்தால் இருப்பு ஆவது என் சிந்தையே.

8
உரை
பாடல் எண் :1838

வன்னி, கொன்றை, எருக்கு, அணிந்தான் மலை
உன்னியே சென்று எடுத்தவன் ஒண் திறல்-
தன்னை வீழத் தனி விரல் வைத்தவன்
கன்னி மா மதில் கானூர்க் கருத்தனே.

9
உரை