143 | மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார்; மணி முடிமேல் அர வைத்தார்; அணி கொள் மேனி நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார்; நெற்றிமேல் கண் வைத்தார்; நிலையம் வைத்தார்; ஆறு மலைந்து அறு திரைகள் எறிய வைத்தார்; ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார்; நாறு மலர்த்திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!. |