154 | அரை சேர் அரவன் ஆம்; ஆலத்தான் ஆம்; ஆதிரை நாளான் ஆம்; அண்ட வானோர் திரை சேர் திருமுடித் திங்களான் ஆம்; தீவினை நாசன், என் சிந்தையான் ஆம்; உரை சேர் உலகத்தார் உள்ளானும்(ம்) ஆம்; உமையாள் ஓர்பாகன் ஆம்; ஓத வேலிக் கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. |