283 | ஏனத்து இள மருப்புப் பூண்டார்போலும்; இமையவர்கள் ஏத்த இருந்தார்போலும்; கானக் கல்லால்கீழ் நிழலார்போலும்; கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர்போலும்; வானத்து இளமதி சேர் சடையார்போலும்; வான் கயிலைவெற்பில் மகிழ்ந்தார்போலும்; ஆனத்து முன் எழுத்து ஆய் நின்றார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே. |