328பூ ஆர்ந்த சென்னிப் புனிதா, போற்றி! புத்தேளிர்
                  போற்றும் பொருளே, போற்றி!
தே ஆர்ந்த தேவர்க்கும் தேவே, போற்றி!
         திருமாலுக்கு ஆழி அளித்தாய், போற்றி!
சாவாமே காத்து என்னை ஆண்டாய், போற்றி!
          சங்கு ஒத்த நீற்று எம் சதுரா, போற்றி!
சே ஆர்ந்த வெல் கொடியாய், போற்றி
    போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.