812 | படம் ஆடு பன்னகக்கச்சு அசைத்தான் கண்டாய்; பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்; நடம் ஆடி ஏழ் உலகும் திரிவான் கண்டாய்; நால்மறையின் பொருள் கண்டாய்; நாதன் கண்டாய்; கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய்; கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய்; குடம் ஆடி இடம் ஆகக் கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே. |