6.88 திருஓமாம்புலியூர்
திருத்தாண்டகம்
869ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை; அலை கடல் நஞ்சு
                       அயின்றானை; அமரர் ஏத்தும்
ஏர் ஆரும் மதி பொதியும் சடையினானை; எழுபிறப்பும் எனை
                         ஆளா உடையான் தன்னை;
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை; உயர் புகழ் சேர்தரும்
                              ஓமாம்புலியூர் மன்னும்
சீர் ஆரும் வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து
                             நாள் செலுத்தினேனே!.