879கோழிக் கொடியோன் தன் தாதைபோலும்; கொம்பனாள் பாகம்
                                    குளிர்ந்தார் போலும்;
ஊழி முதல்வரும் தாமே போலும்; உள்குவார் உள்ளத்தின்
                                     உள்ளார் போலும்;
ஆழித்தேர் வித்தகரும் தாமே போலும்; அடைந்தவர்கட்கு
                            அன்பராய் நின்றார் போலும்;
ஏழு பிறவிக்கும் தாமேபோலும் இன்னம்பர்த் தான் தோன்றி
                                            ஈசனாரே.