21 | பட்டு உடுத்து, தோல் போர்த்து, பாம்பு ஒன்று ஆர்த்து, பகவனார், பாரிடங்கள் சூழ நட்டம் சிட்டராய், தீஏந்தி, செல்வார் தம்மைத் தில்லைச் சிற்றம்பலத்தே கண்டோம், இந் நாள்; விட்டு இலங்கு சூலமே, வெண் நூல், உண்டே; ஓதுவதும் வேதமே; வீணை உண்டே; கட்டங்கம் கையதே, -சென்று காணீர்!-கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே. |