261 | நல்லூரே நன்று ஆக நட்டம் இட்டு, நரை ஏற்றைப் பழையாறே பாய ஏறி, பல் ஊரும் பலிதிரிந்து, சேற்றூர் மீதே,-பலர் காண.-தலையாலங்காட்டின் ஊடே, இல் ஆர்ந்த பெருவேளூர்த் தளியே பேணி, இராப் பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு(வ்), எல் ஆரும் தளிச்சாத்தங்குடியில் காண, இறைப்பொழுதில் திரு ஆரூர் புக்கார் தாமே. |