278சுருக்கமொடு, பெருக்கம், நிலை நிற்றல், பற்றித்
       துப்பறை என்று அனைவீர்! இவ் உலகை ஓடிச்
செருக்கி மிகை செலுத்தி உம செய்கை வைகல்
        செய்கின்றீர்க்கு அமையாதே? யானேல், மிக்க,
தருக்கி மிக வரை எடுத்த, அரக்கன் ஆகம் தளர
         அடி எடுத்து அவன் தன் பாடல் கேட்டு(வ்)
இரக்கம் எழுந்து அருளிய எம்பெருமான் பாதத்து
      இடையிலேன்; கெடுவீர்காள்! இடறேன்மி(ன்)னே!.