271சில் உருவில் குறி இருத்தி, நித்தல் பற்றி, செழுங்
                  கணால் நோக்கும் இது ஊகம் அன்று;
பல் உருவில்-தொழில் பூண்ட பஞ்சபூதப்-பளகீர்!
                  உம் வசம் அன்றே! யானேல், எல்லாம்
சொல் உருவின் சுடர் மூன்று ஆய், உருவம் மூன்று
            ஆய், தூ நயனம் மூன்று ஆகி, ஆண்ட ஆரூர்
நல் உருவில் சிவன் அடியே அடைவேன்;
    நும்மால் நமைப்புண்ணேன்; கமைத்து நீர் நடமின்க(ள்)ளே!.