279 | நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்; நீங்காமே வெள் எலும்பு பூண்டார்போலும்; காற்றினையும் கடிது ஆக நடந்தார்போலும்; கண்ணின்மேல் கண் ஒன்று உடையார்போலும்; கூற்றினையும் குரை கழலால் உதைத்தார்போலும்; கொல் புலித் தோல் ஆடைக் குழகர்போலும்; ஆற்றினையும் செஞ்சடைமேல் வைத்தார்போலும்-அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே. |