333 | நந்தி பணி கொண்டு அருளும் நம்பன் தன்னை, நாகேச்சுரம் இடமா நண்ணினானை, சந்தி மலர் இட்டு அணிந்து வானோர் ஏத்தும் தத்துவனை, சக்கரம் மாற்கு ஈந்தான் தன்னை, இந்து நுழை பொழில் ஆரூர் மூலட்டானம் இடம் கொண்ட பெருமானை, இமையோர் போற்றும் அந்தணனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த வாறே!. |