6.5 திருஅதிகைவீரட்டானம்
போற்றித் திருத்தாண்டகம்
44எல்லாம் சிவன் என்ன நின்றாய், போற்றி! எரிசுடர்
            ஆய் நின்ற இறைவா, போற்றி!
கொல் ஆர் மழுவாள்படையாய், போற்றி! கொல்லும்
            கூற்று ஒன்றை உதைத்தாய், போற்றி!
கல்லாதார் காட்சிக்கு அரியாய், போற்றி! கற்றார்
            இடும்பை களைவாய், போற்றி!
வில்லால் வியன் அரணம் எய்தாய், போற்றி!-
            வீரட்டம் காதல் விமலா, போற்றி!.