| 101 | தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார்; துளங்கா மணி முடியார்; தூய நீற்றார்;
 இண்டைச் சடை முடியார்; ஈமம் சூழ்ந்த இடு
 பிணக்காட்டு ஆடலார், ஏமம் தோறும்;
 அண்டத்துக்கு அப் புறத்தார்; ஆதி ஆனார்;
 அருக்கனாய், ஆர் அழல் ஆய், அடியார்மேலைப்
 பண்டை வினை அறுப்பார்; பைங்கண் ஏற்றார்;
 பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.
 |