| 560 | நெடிய விசும்போடு கண்ணே, போற்றி! நீள அகலம் உடையாய், போற்றி!
 அடியும் முடியும் இகலி, போற்றி! அங்கு ஒன்று
 அறியாமை நின்றாய், போற்றி!
 கொடிய வன் கூற்றம் உதைத்தாய், போற்றி!
 கோயிலா என் சிந்தை கொண்டாய், போற்றி!
 கடிய உருமொடு மின்னே, போற்றி! கயிலை
 மலையானே, போற்றி போற்றி!.
 |