613 | எவரேனும் தாம் ஆக; இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி, உவராதே, அவர் அவரைக் கண்ட போது உகந்து அடிமைத் திறம் நினைந்து, அங்கு உவந்து நோக்கி, “இவர் தேவர், அவர் தேவர்,” என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்து, ஈசன் திறமே பேணி, கவராதே, தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!. |