| 969 | ஈசனை, எவ் உலகினுக்கும் இறைவன் தன்னை, இமையவர் தம் பெருமானை, எரி ஆய் மிக்க
 தேசனை, செம்மேனி வெண் நீற்றானை, சிலம்பு
 அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற
 நேசனை, நித்தலும் நினையப் பெற்றோம்; நின்று
 உண்பார் எம்மை நினையச் சொன்ன
 வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே; வந்தீர் ஆர்?
 மன்னவன் ஆவான் தான் ஆரே?.
 |