| 144 | குலங்கள் மிகு மலை, கடல்கள், ஞாலம், வைத்தார்; குரு மணி சேர் அர வைத்தார்; கோலம் வைத்தார்;
 உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்; உண்டு
 அருளி விடம் வைத்தார்; எண்தோள் வைத்தார்;
 நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார்;
 நிமிர் விசும்பின் மிசை வைத்தார்; நினைந்தார் இந் நாள்
 நலம் கிளரும் திருவடி என் தலைமேல்
 வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
 |