15 | கார் ஆர் கமழ் கொன்றைக் கண்ணி சூடி, கபாலம் கை ஏந்தி, கணங்கள் பாட, ஊரார் இடு பிச்சை கொண்டு, உழ(ல்)லும் உத்தமராய் நின்ற ஒருவனார்தாம்: சீர் ஆர் கழல் வணங்கும் தேவதேவர்; திரு ஆரூர்த் திரு மூலட்டானம் மேயார்- போர் ஆர் விடை ஏறிப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே. |