243ஊன் ஏறு படுதலையில் உண்டியான்காண்;
        ஓங்காரன்காண்; ஊழி முதல் ஆனான்காண்;
ஆன் ஏறு ஒன்று ஊர்ந்து உழலும் ஐயாறான்காண்;
    அண்டன்காண்; அண்டத்துக்கு அப்பாலன்காண்;
மான் ஏறு கரதலத்து எம் மணிகண்டன்காண்; மா
  தவன்காண்; மா தவத்தின் விளைவு ஆனான்காண்;
தேன் ஏறும் மலர்க்கொன்றைக்கண்ணியான்காண்-திரு
               ஆரூரான்காண், என் சிந்தையானே.