264 | வெற்பு உறுத்த திருவடியால் கூற்று அட்டானை; விளக்கின் ஒளி, மின்னின் ஒளி, முத்தின் சோதி, ஒப்பு உறுத்த திரு உருவத்து ஒருவன்தன்னை; ஓதாதே வேதம் உணர்ந்தான்தன்னை; அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்தன்னை, அமுது உண்டார் உலந்தாலும் உலவா தானை- அப்பு உறுத்த நீர் அகத்தே அழல் ஆனானை;- ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!. |