| 354 | கொள்ளைக் குழைக் காதின் குண்டைப்பூதம் கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட,
 உள்ளம் கவர்ந்திட்டுப் போவார் போல உழிதருவர்;
 நான் தெரியமாட்டேன், மீண்டேன்;
 கள்ளவிழி விழிப்பார், காணாக் கண்ணால்;
 கண்ணுளார் போலே கரந்து நிற்பர்;
 வெள்ளச் சடைமுடியர்; வேத நாவர் வெண்காடு
 மேவிய விகிர்தனாரே.
 |