362இரவும் பகலும் ஆய் நின்றார் தாமே; எப்போதும்
                 என் நெஞ்சத்து உள்ளார் தாமே;
அரவம் அரையில் அசைத்தார் தாமே; அனல் ஆடி
                       அங்கை மறித்தார் தாமே;
குரவம் கமழும் குற்றாலர் தாமே; கோலங்கள் மேல்
                         மேல் உகப்பார் தாமே;
பரவும் அடியார்க்குப் பாங்கர் தாமே பழனநகர்
                            எம்பிரானார் தாமே.