399ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய்; அடையலர்
             தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய்;
காலால் அக் காலனையும் காய்ந்தான் கண்டாய்;
    கண்ணப்பர்க்கு அருள் செய்த காளை கண்டாய்;
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய்; பசு
              ஏறிப் பலி திரியும் பண்பன் கண்டாய்;
மாலாலும் அறிவு அரிய மைந்தன் கண்டாய் மழபாடி
                       மன்னும் மணாளன் தானே.