38ஒழித்திடுமே, உள்குவார் உள்ளத்து உள்ள உறு
        பிணியும் செறு பகையும்; ஒற்றைக்கண்ணால்
விழித்திடுமே, காமனையும் பொடி ஆய் வீழ;
          வெள்ளப் புனல் கங்கை செஞ்சடைமேல்
இழித்திடுமே; ஏழ் உலகும் தான் ஆகு(ம்)மே;
         இயங்கும் திரிபுரங்கள் ஓர் அம்பி(ன்)னால்
அழித்திடுமே; ஆதி மா தவத்து உளானே;- அவன்
                 ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.