427உரித்து அன்று, உனக்கு இவ் உடலின் தன்மை;
              உண்மை உரைத்தேன்; விரதம் எல்லாம்
தரித்தும் தவம் முயன்றும் வாழா நெஞ்சே! தம்மிடையில்
           இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன்;
எரி(த்)த்தான்; அனல் உடையான்; “எண்தோளானே!
    எம்பெருமான்!” என்று ஏத்தா இலங்கைக் கோனை
நெரித்தானை, நெய்த்தானம் மேவினானை, நினையுமா
                    நினைந்தக்கால் உய்யல் ஆமே.