425அஞ்சப் புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு,
        அருநோய்க்கு இடம் ஆய உடலின் தன்மை
தஞ்சம் எனக் கருதி, தாழேல், நெஞ்சே! தாழக்
                     கருதுதியே? தன்னைச் சேரா
வஞ்சம் மனத்தவர்கள் காண ஒண்ணா மணிகண்டன்,
             “வானவர் தம் பிரான்!” என்று ஏத்தும்
நெஞ்சர்க்கு இனியவன், நெய்த்தானம் என்று
         நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.