Try error :java.sql.SQLException: Closed Resultset: next
424பேசப் பொருள் அலாப் பிறவி தன்னைப் பெரிது
        என்று உன் சிறு மனத்தால் வேண்டி, ஈண்டு
வாசக்குழல் மடவார் போகம் என்னும் வலைப்பட்டு,
                        வீழாதே வருக, நெஞ்சே!
தூசக் கரி உரித்தான்; தூநீறு ஆடித் துதைந்து
              இலங்கு நூல் மார்பன்; தொடரகில்லா
நீசர்க்கு அரியவன்; நெய்த்தானம் என்று நினையுமா
                   நினைந்தக்கால் உய்யல் ஆமே.