| 442 | நம்பனே! நால் மறைகள் ஆயினானே! நடம் ஆட வல்லானே! ஞானக்கூத்தா!
 கம்பனே! கச்சி மா நகர் உளானே! கடி மதில்கள்
 மூன்றினையும் பொடியா எய்த
 அம்பனே! அளவு இலாப் பெருமையானே!
 அடியார்கட்கு ஆர் அமுதே! ஆன் ஏறு ஏறும்
 செம்பொனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ்
 ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.
 |