| 467 | பந்து அணவு மெல்விரலாள் பாகன் தன்னை, பாடலோடு ஆடல் பயின்றான் தன்னை,
 கொந்து அணவு நறுங்கொன்றை மாலையானை, கோல
 மா நீலமிடற்றான் தன்னை,
 செந்தமிழோடு ஆரியனை, சீரியானை, திரு மார்பில்
 புரி வெண்நூல் திகழப் பூண்ட
 அந்தணனை, ஆவடுதண் துறையுள் மேய அரன்
 அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
 |