| 465 | மெய்யானை, பொய்யரொடு விரவாதானை, வெள்ளடையை, தண்நிழலை, வெந்தீ ஏந்தும்
 கையானை, காமன் உடல் வேவக் காய்ந்த கண்ணானை,
 கண்மூன்று உடையான் தன்னை,
 பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை,
 பாய் புலித்தோல் உடையான் தன்னை,
 ஐயானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே
 அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
 |