45பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா, போற்றி! பல்
                  ஊழி ஆய படைத்தாய், போற்றி!
ஓட்டு அகத்தே ஊணா உகந்தாய், போற்றி!
          உள்குவார் உள்ளத்து உறைவாய், போற்றி!
காட்டு அகத்தே ஆடல் மகிழ்ந்தாய், போற்றி!
             கார்மேகம் அன்ன மிடற்றாய், போற்றி!
ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய், போற்றி!-அலை
            கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.